Tuesday, September 4, 2012

நற்குடி வேளாளர் வரலாறு


Link from: https://groups.google.com/d/topic/mintamil/G7lUtCyvVmw/discussion


2012/9/1 தென்காசி சுப்பிரமணியன்






//நற்குடி வேளாளர் வரலாறு நூலில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு ஆண்டதாக மாங்குளம் கல்வெட்டு கூறும் நெடுஞ்செழியன் (மாங்குளம்) மற்றும் கடலன் வழுதி பெயர் காணப்படுகிறது. அதனால் இது வரலாற்று நூலாக இருக்கலாம் என்பது என் கருத்து.//





இதில் ஐயம் என்ன? அது ஒரு வரலாற்று நூல்தான். சிறப்பாக பாண்டியருடையது ஆனாலும் சமகால சேர சோழ வேந்தர் பற்றியும் குறிப்பிடுவதால் அது ஒரு வரலாற்று நூலே.





//இந்த இழையும் உரையாடலும் அதை வரலாற்று நூல் போலவே காட்டுகிறது. நற்குடி வேளாளர் வரலாறு நூல் ஆறுமுக நயினார் எந்தாண்டில் எழுதினார். அது ஏதும் வில்லுப்பாட்டு போன்றவற்றில் இருந்து எழுதப்பட்டதா? மாங்குளம் கல்வெட்டுகள் அறியப்பட்ட பின்னர் அதை எழுதினாரா? அல்லது முன்னர் எழுதினாரா?//





1920 இல் வெளியான நூல் இராசம கண்டியர் பிரபாகரன் அந்நூலை pdf செய்து அனுப்புவதாக சொல்கிறார். அதை படித்தால் நீங்கள் அறிய விரும்பும் செய்தி கிட்டலாம்.







On Friday, August 31, 2012 8:44:03 PM UTC+5:30, seshadri sridharan wrote:





2012/8/31 தென்காசி சுப்பிரமணியன்





//மெகசுதனிஷ் குறிப்பிடும் பண்டையா அரசியும் ஏறகிழ்சு அரசனும் யார் ? Heracles என்பது krishna என்பதன் திரிபா? அப்படியும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்களே!





எனக்கென்னவோ ஒருவேளை Heracles பாண்டியனாக இருப்பின் korkai arasan என்பது Heracles என்று திரிந்திருக்கும் என்பது என் எண்ணம். வேறு பாண்டியர் பெயர் Heracles என்பதுடன் பொருந்துகிறதா?





ஏதும் மொழியியல் ஆய்வாளர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.//





பாண்டியன் என்ற பெயர் troy நகராண்ட மன்னர் குடும்பத்திலும் வழங்கக் காணலாம். அந்த அளவிற்கு பாண்டியரின் மேலை ஆசியத் தொடர்பு இருந்துள்ளது. heracles என்பதை நேரடியாக தமிழாக்க இயலும் ஹகரத்தை ககரம் கொண்டு மாற்றினால் கீரக்கல்s என்று வரும். இந்த இறுதி ஸ் ஒலி பல மேலை நாகரிகங்களில் குறிப்பாக கிரேக்கத்தில் ஒரு கூறாகவே வழங்குகின்றது. அந்த ஒலியே தமிழைத் தமிழல்லாததாக காட்டுகின்றது.





கீரன் + அக்கல் என்ற இரு பெயரொட்டு தான் கீரக்கல் என்பது. 'அன்' ஈறு அல்லாமல் 'அல்' ஈறும் பண்டு வழங்கியது. இப்போது ஆள்பெயர் ஈறாக அல் வழங்கிவதில்லை ஆனால் ஊர்ப் பெயர்களில் அது இன்றும் வழங்குவது இதற்கு சான்றாகும். காட்டாக, சாயன் என்பது சாயல் என்று சாயல்குடியில் வழங்குகின்றது. சுக்கன் என்பது சுக்கல் என ஊர்ப்பெயராக வழங்குகின்றது.





கி.மு. 150 - 140 பாண்டியன் கீரன் சாத்தன் 78 ஆவது





heracles > கிருஷ்ணா என்பதினின்றோ, கொற்கை அரசன் என்பதினின்றோ திரிந்ததல்ல.





துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் அமைந்து இருந்த இலியத்து காவியப் புகழ் திராய் (Troy) நகர அரசர் பெயரை குடும்ப வரிசைப்படி வழங்கும் தொகுப்பில் இடம் பெறும் சில தமிழ்ப் பெயர்கள் Dardanus (தார்தன்னன்), Phineus (பின்னி> பின்னன்), zetes (சேட்டி > சேட்டன்), Calais (காளை), Capys(காப்பி), Pandion (பாண்டியன்), Ilus(இல்லன்), Laomedon (இளஓமிதன் > இள ஓமன் தன்னன்), Telamon (தில்லமன்), Tithonus (தித்தன்), Cycnus (கய்கன்) என்பன ஆகும். இவர்களின் ஆட்சி ஆண்டுக் குறிப்பு இல்லை. இப்பெயர்கள் கிரேக்கத் தாக்கம் கொண்டு உள்ளன. 'S' ஈறைத் தவிர்த்தால் இது விளங்கு





http://www.musesrealm.net/familytrees/rulerstroy.html




சேசாத்திரி

7 comments:

பட்டிக்காடு said...

நற்குடி வேளாளர் வரலாறு நூல் கண்டுபிடித்தீர்களா?எனக்கு அந்த நூல் தேவைப்படுகிறது..

கவிஞர்.அ.வெண்ணிலா

Arul said...

Can I have a copy of it. I can pay for it.

Ramalingam pillai said...

I am searching this book so long. I pay for this book. Kindly contact through mail id...
m.ramalingam1970@gmail.com or contact 9894010885.

sriramakrishnan said...

நற்குவணக்கம் அய்யா நற்குடி வேளாளர் வரலாறு நூல் கிடைக்கப்பெறுமா..அதில் செங்கோல் ஆதினச்செய்திகள் உள்ளனவாம். Pdf ஆக பெறுவது எப்படி..

Unknown said...

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.
அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.
வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
வேளாளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

Tamilan blood said...

ஐயா நற்குடி வேளாளர் புத்தகத்தை என்னுடைய ஆய்விற்காக நீண்ட நாட்கள் தேடிக்கொண்டிருக்கிறேன் இருந்தால் அனுப்பி உதவுங்கள் ஐயா... tamilanblood26@gmai.com

Unknown said...

சிவகளை நற்குடி வெள்ளாளர் வரலாறு
https://t.me/nargudivellalarvaralaru



நற்குடி வெள்ளாளர் வரலாறு புத்தகம்